ஜா-எல வெலிகம்பிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்தில் மோதியதில் சைக்கிள் ஓட்டி சென்றவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கந்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகம்பிட்டிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஜயசூரிய குரணகே ஷெனால் ரெனோல் பெரேரா என்ற 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது, மூன்று பேர் பாதுகாப்பு தலைக்கவசம் கூட இல்லாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பின் இலக்கத் தகடு காணாமல் போயிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.