வீதியில் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்கமுற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் !!!
களுத்துறை, வாதுவை பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட முயற்சித்தாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையடிக்க முயன்றபோது, பொலிஸ் உத்தியோகத்தருடன் பெண் சண்டையிட்டுள்ளார்.
இச் சம்பவத்தை அவதானித்த பிரதேசவாசிகள் சந்தேக நபரை சுற்றிவளைத்துப் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()