அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிகள் மற்றும் முன்நிபந்தனைகளை மாற்றியமைப்பது தொடர்பில் தமது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் உள்ள இராணுவ தளங்களுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கு யுக்ரைன் அனுமதி கோரியுள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நிலையில், யுக்ரைன் ஒரு அணுசக்தி ஆயுதங்களைக் கொண்டிராத நாடு என்ற போதிலும், அந்த நாடு அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளிடமிருந்து இராணுவ ஆதரவைப் பெற்று வருவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here