மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் அக்டோபர் 14 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வானது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குளிர்கால மாதங்களில் சுமார் ஒரு மில்லியன் பறவைகள் இப்பகுதிக்கு வருகை தருவதாக மனுதாரர் குறிப்பிடுகிறார். இந்தப் பகுதிக்கு ஏதேனும் தடை ஏற்பட்டால், இந்தப் பறவைகளின் இடம்பெயர்வு முறைகள் கணிசமாக பாதிக்கப்படும் என்று மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், மன்னார் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், போதிய அறிவியல் நியாயம் இல்லாமல், அரசியல் மற்றும் வெளிப்புற காரணிகளால் முதன்மையாக காற்றாலை திட்டத்திற்கு மன்னார் தேர்வு செய்யப்பட்டதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here