கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ​டாக்டர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதிக காய்கறிகள், இறைச்சி, மீன் உள்ள உணவில் கவனம் செலுத்தி, உடல் எடையை பராமரிக்க வேண்டும்.

மற்றும் ’குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் ,உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்  இருந்தாலோ ,கழுத்துப் பகுதியில் கருப்பு நிறம் மற்றும் முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் இருந்தாலோ நீரிழிவு நோயை பரிசோதிப்பது முக்கியமென கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here