கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தமது நிரந்தர நியமனங்கள் குறித்து கடந்த கால ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம்  கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவர்களால் எவ்வித நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படாத  நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர  நியமனம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான  செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து ஆளுநர் செந்தில் தொண்டமானால் உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 1,350 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில் நிரந்தர நியமனங்கள்  வழங்கி வைக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

10 வருடமாக காணப்பட்ட தங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஒரு வருடக் காலத்திற்குள் பெற்றுத்தந்த ஆளுநருக்கு உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here