அக்மீமன பகுதியில் பல துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு தெற்கு குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையின் போதே 72 வயதுடைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ரிவால்வர், ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி, ஒரு ஏர் ரைபிள் மற்றும் 49 ரவுண்டு துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







