யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக நேற்று புதன்கிழமை (30/04/2025) வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.

அவ்வேளை அவரை வீதியால் சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் மயக்கமடைந்து மரணம் சம்பவித்துள்ளது என மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் அந்த நபர் காலை உணவை அருந்தாமல், வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் உள்ள தோட்டவெளியில் பயணித்துக்கொண்டிருந்தவர் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here