பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஒரு போலி கடிதம் குறித்து இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

ஆங்கிலத்தில் ‘CONVICTION’ என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கடிதம், பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவின் போலி கையொப்பத்தைக் கொண்டுள்ளது என்றும், அது போலீஸ் சைபர் கிரைம் தலைமையகத்தைக் குறிக்கிறது என்றும் காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

தவறான தகவல்களைக் கொண்ட இந்தக் கடிதம், இலங்கையின் கொழும்பில் உள்ள சைபர் கிரைம் தலைமையகம் என அடையாளம் காணப்பட்ட ஒரு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் தற்போது இல்லை என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

இந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள் காவல் துறையால் வெளியிடப்படவில்லை என்றும், இந்தக் கடிதம் பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றி அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொய்யான கடிதத்திற்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என்று வலியுறுத்தி, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here