யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொன்னாலை பகுதியில் நேற்று (02) பிற்பகல் அத்துமீறி பயணித்த பாரவூர்தி மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற பாரவூர்தியை நிறுத்த காவல்துறையினர் பலமுறை சமிஞ்சை செய்த போதிலும், பாரவூர்தியை நிறுத்தாமல் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக காவல்துறையினர் குறித்த பாரவூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாரவூர்தியின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாரவூர்தி மீது பல தடவைகள் துப்பாக்கிப் பிரயோக மேற்கொள்ளப்பட்ட பின்னரே சாரதி வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
பின்னர் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சாரதியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அறிந்து, பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த பாரவூர்தியில் இருவர் பயணித்ததாகவும் ,அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.







