அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரசு ஊழியர்கள் தங்களது பணியிலிருந்து தன்னார்வமாக விலகவுள்ளனர். இதற்கான முக்கிய காரணமாக, நிர்வாக செலவுகளை குறைக்கும் முயற்சியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த அறிவிப்பு தான் காரணமாகும்.
ட்ரம்ப், அரசு செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சில முக்கிய துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் விருப்பப்பூர்வமாக பதவி விலக வேண்டும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கான கடைசி நாளாக இன்று குறிப்பிடப்பட்டிருந்ததால், ஒரு இலட்சம் ஊழியர்கள் ஒரே நாளில் ராஜிநாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, தற்போதைய ஆண்டின் முடிவில், மொத்தமாக 3 இலட்சம் அரசு ஊழியர்கள் பதவி விலகக்கூடும் என அரசு தரப்பில் கணிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் 23 இலட்சமாக இருந்த சிவில் பணியாளர்களின் எண்ணிக்கை, இந்த மாத இறுதியில் 21 இலட்சமாக குறையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 12% ஊழியர்கள் பதவி விலகும் நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, கடந்த ஜூன் மாத இறுதிக்குள் மட்டும், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கறுப்பின பெண்கள் பணியை விட்டு விலகியுள்ளனராம் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் நிர்வாகக் கொள்கைகள் அரசு துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.








