அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நண்பரான சார்லி கிர்க்கைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியைச் சுற்றி சுற்றப்பட்டிருந்த துண்டில் இருந்த மரபணு, காவலில் உள்ள சந்தேக நபருடன் பொருந்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் இதனை உறுதி செய்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட டைலர் ரொபின்சனுக்கு எதிராக இந்த வாரத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமையன்று இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








