சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை சிறிது காலம் மிரட்டலாம் என்பதை தவிர்த்து ஈரானியர்களிடம் வேறு எதுவுமே இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்ததை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் ட்ரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள் போரை விட பொய் செய்தி பரப்புதல் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றை கையாள்வதில் ஈரான் அரச நிர்வாகத்தினர் சிறந்தவர்களாக உள்ளனர்.
அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டால் ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்காக சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன.
நாங்கள் இதுவரை பயன்படுத்தாத சிறந்த வெடிப்பொருட்களையும் ஆயுதங்களையும் ஏற்றுக்கொண்டு கப்பலில் தயாராக இருக்கிறோம். இதற்கு முன் நடந்த தாக்குதலை விட தீவிர தாக்குதலாக அது இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







