அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 21 மணித்தியால பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது.
அதற்கிணங்க அமெரிக்க,ஈரான் பிரதிநிதிகள் உட்பட ஏனைய நாட்டு முக்கியஸ்தர்களும் பாகிஸ்தான் புறப்பட்டிருந்தனர்.
இஸ்லாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை (11)பகல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
இந்நிலையில் சுமார் 21 மணித்தியாலம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்க்கமான முடிவும் எட்டப்பபடவில்லை என அமரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.







