அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்த விலைக்கே மொத்த விற்பனையாளர்கள் அரிசியைக் கொள்வனவு செய்வதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

5 முதல் 10 ரூபாய்க்கு இடைப்பட்ட இலாபத்தில் அரிசியை எவ்வாறு விற்பனை செய்வது.

அதேநேரம், நாட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தநிலை தொடருமாயின் அரிசி வர்த்தகத்தைக் கைவிட நேரிடும் என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று முதல் நெல் ஆலை உரிமையாளர்களினால் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசி பொதி, தொகை மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அளவு தொடர்பிலான அறிக்கையைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் பெற்றுக் கொள்ளப்படும் அறிக்கை வர்த்தக அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here