பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அரசாங்க தாதியர் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தாதியர் சேவை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

வியாழக்கிழமை (அக் 31) பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் செயலாளர் ஜி.பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி அசங்க விக்ரமசிங்க, அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய, செயலாளர் அஜித் ரத்நாயக்க, உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி, உப செயலாளர்கள் சமீர பத்திரன, ரேணு ஜயசிங்க, ஏற்பாட்டாளர் பெர்னி சில்வா, குழு உறுப்பினர்களான சந்தியா குமாரி மற்றும் நாடி ராஜபக்ஷ மற்றும் ஏனைய பிரதிநிதிகள் சங்கத்தினர் விவாதத்தில் பங்கேற்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here