அரச சொத்துகள் முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களின் சொத்துகளையும் பகுப்பாய்வுக்குட்படுத்தி முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

1600க்கும் மேற்பட்ட அரசாங்கத்துக்குச்சொந்தமான நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களின் நிலையான சொத்துகள் தொடர்பில் அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்து மக்களுக்குப் பயனுள்ள சேவையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான சட்டவரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here