கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி அரபா பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் எரகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை செய்த சந்தேக நபர் அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்று, வெலிகந்த காவல் பிரிவின் கட்டுவன்வில பகுதியில் மறைந்திருந்தபோது, 12 ஆம் திகதி மாலை எரகம காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
எரகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








