ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளதோடு பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய இராணுவம் முறியடித்து வருகிறது.
இந்நிலையில் அரபிக்கடல் முழுவதையும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்கவும் இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது.
அரபிக்கடலில் இந்திய கடற்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதோடு பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.








