நாட்டில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்தார்.

அரிசிக்கு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேல் விலையில் விற்பனை செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

நெல் கொள்முதல் மற்றும் அரிசி விற்பனை நடவடிக்கைகள் வர்த்தமானி அறிவிப்புக்கு ஏற்ப நடைபெற வேண்டும் எனவும், இதற்காக சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 3,000 க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதில், சுமார் 1,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, 95 மில்லியன் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரிசி பற்றாக்குறையையடுத்து, வர்த்தமானி அறிவிப்பை திருத்த எந்தத் திட்டமும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here