அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க தூதரகம் இன்று காலை எச்சரிக்கை விடுத்ததையடுத்து , ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் அதேபோல எச்சரிக்கையை விடுத்துள்ளன.

ஒரே நேரத்தில் அதிகளவான மக்கள் கூடாமல் பார்த்துக் கொள்ளுமாறு ,இதுதொடர்பில் ரஷ்ய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேபோல, இங்கிலாந்தும் அமெரிக்கா வழங்கிய பயண ஆலோசனையை மேற்கோள் காட்டி அறுகம்பை பகுதிக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது.

இலங்கையிலுள்ள தங்களது நாட்டு பிரஜைகள் கவனமாக செயற்படவேண்டுமென மேற்படி தூதரகங்கள் கேட்டுள்ளன .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here