ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு மொரகொல்ல நீர்மின் திட்டம் உட்பட பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு 30 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
ADB இன் பொது மூலதன ஆதாரங்களில் இருந்து பெறப்படும் நிதி, சிறிய செலவு நிதி வசதிகளின் கீழ் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
மொரகொல்ல நீர்மின் திட்டத்திற்கான கட்டுமான மற்றும் நிர்மாணப் பணிகளுக்குப் பிந்தைய நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கும், மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தக் கடன் பயன்படுத்தப்படும்.
இந்த நிதி இரண்டு தவணைகளில் இலங்கை மின்சார சபைக்கு நேரடியாக ஒதுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது .








