இலங்கையின் பிரபல மருத்துவமனையான கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் இல்லாமல் இயங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இல்லாமல் இயங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பணிப்பாளர் அமைச்சின் கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சுகாதார அமைச்சில் நியமிக்கப்பட்டதால் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பதில் பணிப்பாளர் நியமிக்கப்பட்டார்.
நிரந்தர பணிப்பாளர் இல்லாததால் மருத்துவமனையில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் சுமார் 1500 மருத்துவர்கள், 200 நிபுணர்கள் மற்றும் மொத்தமாக 25,000 ஊழியர்கள் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.








