முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாஹியங்கல ஆனந்த சாகர தேரரிடம், 2000 கோடி ரூபாய் வழங்குமாறு கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
தமக்கு எதிராக அவதூறான அறிக்கைகள் கூறியதற்காக 500 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தின் மூலம் முன்னாள் அமைச்சர் மில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டியதாக சாகர தேரர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக நாணயக்காரவின் சட்டத்தரணிகள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நாணயக்காரவின் உறவினர் ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்துகிறார். அதன் மூலம் முன்னாள் அமைச்சர் பயனடைந்தார் என்று பிக்குவின் குற்றச்சாட்டுகளின் வீடியோ, செப்டம்பர் 3, 2024 அன்று தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் அவரது அரசியல் வாழ்க்கையை கடுமையாக சேதப்படுத்தியுள்ளதாக நாணயக்காரவின் சட்டத்தரணிகள் வலியுறுத்துகின்றனர்.








