கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தடுக்கும் நோக்கில், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
1992 ஆம் ஆண்டு 59 ஆம் இலக்கம் கொண்ட விலங்கு நோய்கள் சட்டத்தின் படி, இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அபாயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அமுல்படுத்தப்பட்ட உத்தரவு ஒக்டோபர் 3 ஆம் திகதி தொடங்கியுள்ளது மற்றும் நோய் சூழ்நிலை பொறுத்து அவ்வப்போது கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கட்டுப்பாடுகளாக,
ஆபத்து பகுதிகளில் பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் நோய்க்கிருமியால் மாசுபட்ட தயாரிப்புகளை அனுமதியின்றி ஏற்ற, எடுத்து செல்ல, விற்பனை செய்ய அல்லது சேமிக்க கூடாது.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதி இல்லாமல் இறைச்சி வெட்டல், பதப்படுத்தல், உற்பத்தி செய்யும் செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இறந்ததாக சந்தேகிக்கப்படும் பன்றிகள் அல்லது பன்றி இறைச்சி மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட கூடாது.
இந்த உத்தரவு மூலம் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்கும், கால்நடை பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன

![[10266984776720b53fdc149]-183](https://vettritv.lk/wp-content/uploads/10266984776720b53fdc149-183.jpg)






