இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகச் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என உத்தரவிடக்கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்ன இதனை மன்றுக்கு அறிவித்தார்.

இந்த மனுக்கள் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட தரப்புக்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here