பழங்களில் அதிகளவான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.

அதிலும் குறிப்பாக தர்பூசணிப் பழங்களில் அதிகளவான சத்துக்கள் உள்ளன.

  1. சிறுநீரக ஆரோக்கியம்

இதில் அடங்கியுள்ள பொட்டாசியம் சிறுநீரக கல் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

  1. கண் பார்வை

இதில் காணப்படும் பீட்டா கரோட்டீன், விட்டமின் சி, லீட்டின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வயதாகும் தோற்றத்தை வரவிடாமல் தடுப்பதோடு, கண் ஆரோக்கியத்தையும் மெருகூட்டுகிறது.

  1. தசை வலி

தசை வலிகளுக்கு தர்பூசணி ஜூஸ் சிறந்த நிவாரணி. உடற்பயிற்சி, ஓட்டம் நடைபயிற்சி செய்பவர்களுக்கு இது நல்லது.

  1. இதய நலன்

சிட்ரூலின், லைக்கோபென் போன்றவை இதில் தர்பூசணியில் அடங்கியுள்ளதால் இதய நலன் காக்கப்படும்.

  1. இரத்த அழுத்தம்

இதிலிருக்கும் சிட்ரூலின் அமினோ அமிலம் ரத்த நாளங்களை ஒழுங்குப்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here