கொழும்பு துறைமுக நகரை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இங்கிரிய பிரதேசத்தில் நேற்று (29.08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் கொழும்பு துறைமுக நகரத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளை கிராம இளைஞர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
ஏனைய கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்த்தால் ஒரே கொள்கைகளை கொண்டுள்ளன. ஒருவேளை ஒருவரே கொள்கைகளை தயாரித்திருப்பார் போல் தெரிகிறது.
அனைவரும் ஒரே விடயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் என்ன வேலைத்திட்டம் என்பது குறித்து எவரும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.







