இந்தியாவுக்கான இலங்கை ஆணையாளர் சந்தூஷ் ஜா மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் குழு இன்று பேலியகொடவில் உள்ள பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் தலைமையகத்திற்கு வருகைதந்திருந்தனர்.
இதன்போது, பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் பணிப்பாளர் மிலிந்த மொரகொடவைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பாத்ஃபைண்டர் தலைமையகத்தில் நிறுவப்பட்ட இந்திய இலங்கை ஆய்வு மையத்தின் செயல்பாடுகளை தூதுக்குழு இதன்போது அவதானித்தது.
பாத்ஃபைண்டர் அறக்கட்டளை இந்திய அரசியல் அமைப்புகள், புலனாய்வு அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறைகளுடன் நடத்திய உரையாடல்களை இங்கு விவாதித்தது.
இச்சந்திப்பில், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான சமூக – பொருளாதார ஒத்துழைப்பை மக்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் தலைவர் பெர்னாட் குணதிலக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








