குறுகிய கால விசாக்களில் உள்ள பாகிஸ்தானியர்கள் ஏப்ரல் 27 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என இந்திய மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறுகிய கால விசாக்களில் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறத் தவறினால் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 3 இலட்சம் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here