தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுக பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீப்பரவல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த தீப்பரவலில் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காணாமல் போயுள்ள 6 பேரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த துறைமுகம் முக்கியமாகக் கொள்கலன் போக்குவரத்தை மேற்கொள்வதுடன், எண்ணெய் தாங்கிகள் உள்ளிட்ட ஏனைய இரசாயன வசதிகளை வழங்கும் துறைமுகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எரியக்கூடிய பொருட்களை சேமித்து வைப்பதில் ஏற்பட்ட அலட்சியமே தீப்பரவலுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுவதுடன், வெடிப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








