இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை   இந்த அமர்வில்  இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து கோஷம் எழுப்பப்பட்டது.

அத்துடன், 90-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மோடி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அமளியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை குழப்பும் வகையில் நடந்து கொண்ட 49 நாடாளுமன்ற உறுப்பினர்களையே பிரதமர் மோடி இடைநீக்கம் செய்திருந்தார்.

நாடாளுமன்ற வரலாற்றில், ஒரு கூட்டத் தொடரில் இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here