கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேற்றையதினம் (31.10.2024) கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் சிறீதரன் உரையாற்றுகையில்,
முதலாளித்துவ சிந்தனைமாறி இடது சாரி கொள்ளை கொண்டவர்கள் மாற்றத்திற்காக நாட்டில் ஆட்சியமைத்திருந்தாலும் அநுர பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க ஏலாது என்று கூறினார். 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பின்பு தான் நாம் பல மக்களை இழந்துள்ளோம். இனரீதியாக நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
மீண்டும் புலிகள் பயங்கரவாதம் உருவாகும் என்ற பயத்தில் தற்போது வந்துள்ளவர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். 13வது திருத்த சட்டமும் இல்லை நாங்கள் தாற சோறும் தண்ணீருடன் தான் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடே இப்போதைய அரசாங்கத்தின் நோக்கம்.
அரசாங்கம் வரும் போது இருந்த பார்வை தற்போது குறைந்துள்ளது. நானும் ஜனாதிபதியைச்சந்தித்து வாழ்த்தியிருந்தேன். ஆனால் அவர்களின் மனநிலை ஆட்சியை கைப்பற்றலாமா ஆட்சிக்குள் போகலாமா என யோசிக்கிறார்கள். கடந்தகால அரசாங்கத்தில் இருந்த இனவாதம் அப்படியே இவர்களிடம் இருக்கிறது. பாலிலே கழுவிய மனிதர்கள் போல் தங்களை காட்டுகிறார்கள்.
தமிழ் மக்களுக்கு தீர்வு விடயத்தில் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். மைத்திரி வந்தபோது பல அரசியலமைப்பு கொண்டு வருவதற்கான முயற்சி நடந்தாலும் அது வெற்றியளிக்கவில்லை. ஒற்றுமையின்மை எஎமக்குள் மாத்திரம் அல்ல வெளிநாடுகளிடமும் உள்ளது. போராடுகின்ற இனத்திற்குள் எதிரிகள் ஒற்றுமையின்மையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வரலாற்றில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். தோல்வியை தாங்கமுடியாது வழக்கு தாக்கல் செய்தார். மக்களின் கைகளில் தான் உள்ளது சிறீதரன் தலைவராக கட்சியை கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் நீங்கள் தருகின்ற சந்தர்ப்பத்தில் எல்லாரையும் இணைத்து தமிழ்த்தேசியத்திற்காக பயணிப்பேன். சிறீதரனை கட்சியிலிருந்து நீக்க முடியாது. எனக்கு ஆசனம் கொடுக்கக்கூடாது என்று ஒருவர் துள்ளிக்குதித்தார் என தெரிவித்தார்.







