இன்டர்போல் ஏற்பாடு செய்துள்ள பொதுத் தொடர்புக்கான முதல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்று, பொலிஸ் ஊடக பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) ஃபிரெட்ரிக் வூட்லர் இன்று காலை பிரான்ஸுக்கு பயணமாகியுள்ளார்.

இந்த மாநாட்டின் போது, ​​நாட்டில் சமீபத்தில் சம்பவித்த பேரிடர் சூழ்நிலைகளின் போது, ​​பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ் எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்து அவர் ஒரு விசேட விளக்கக்காட்சியை வழங்க உள்ளார்.

இத்தகைய ஒரு சர்வதேச பொலிஸ் மாநாட்டில் விசேட உரையாற்ற அழைக்கப்பட்ட முதல் இலங்கை பொலிஸ் ஊடக பேச்சாளர் என்ற மைல்கல்லை உதவி பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் எட்டியுள்ளார்.

இந்த மாநாடு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30 வரை பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற உள்ளது.

இன்டர்போல் என்பது சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பாகும். இது, பல்வேறு நாடுகளின் காவல்துறையை இணைக்கிறது. இலங்கை உட்பட 196 நாடுகள் இந்த அமைப்பில் பங்கு வகிக்கின்றன.

உதாரணமாக ஒரு குற்றவாளி இலங்கையில் இருந்து டுபாய்க்கு தப்பி சென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறையுடன் தொடர்பு கொள்ள இன்டர்போல் இலங்கை காவல்துறைக்கு உதவி செய்வது போன்ற நடவடிக்கைகளை இது மேற்கொள்கிறது.

மேலும், இது தேடப்படும் நபர்கள், திருடப்பட்ட கடவுச்சீட்டுகள், திருடப்பட்ட கார்கள் போன்றவற்றைக் கொண்ட ஒரு தரவுத்தளத்தை இயக்குகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here