சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் இன்று (20) மூடப்பட்டிருந்த அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (21) திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் மாலையின் பின்னர் அறிவிக்கப்படும் என வடமத்திய மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (ஜனவரி 20) மூடப்படும் என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.








