தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட 2000 ரூபா மானியத்தொகையை 4000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இன்று (29.07) அறிவித்துள்ளது.

நாட்டில் வருடாந்த தேயிலை உற்பத்தி 260 மில்லியன் மெற்றிக் தொன்களாகக் குறைந்துள்ள நிலையில், அந்தத் தொகையை 300 மில்லியன் மெற்றிக் தொன்களாக அதிகரிக்க வேண்டியுள்ளது.

தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதனை ஊக்குவிக்கும் வகையில் 2000 ரூபா மானியத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்ட போதிலும், தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு குறித்த தொகை போதுமானதாக இல்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக தேயிலை உர மானியத்தை 4000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் பருவகாலத்தில் இருந்து இந்த உர மானியம் வழங்கப்படவுள்ளதுடன், உரத்தின் விலை மேலும் 2000 ரூபாவால் குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மானியத்திற்காக 02 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், குறித்த தொகையை இலங்கை தேயிலை சபையின் நிதியின் ஊடாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here