எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் குறிக்கும் பணி ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (01) இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

அனைத்து பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், ஆயுதப்படை மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு இன்று (01) மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த குறிப்பிட்ட நாட்களில் வாக்களிக்க முடியாத தபால்மூல வாக்காளர்கள் நவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் தமது பணியிடத்திற்கு அமைய மாவட்ட செயலகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here