கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அக்டோபர் 24ஆம் திகதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சக்கீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சட்டவிரோதமான முறையில் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லங்கா சதொச (CWE) யின் 153 ஊழியர்களை 2010 – 2014 வரை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 40 மில்லியன் நஷ்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here