பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு இராணுவ புரட்சியை ஏற்படுத்த சதி செய்த குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த போல்சனாரோ, தனது ஆட்சியை தக்கவைக்க இராணுவ புரட்சியை நடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் நான்கு நீதியரசர்கள் அவரை குற்றவாளி என அறிவித்தனர். ஒரே நீதியரசர் மாத்திரம் விடுதலைக்காக வாக்களித்தார்.

தற்போது வீட்டுக் காவலில் உள்ள போல்சனாரோ, தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதேவேளை, இந்தத் தீர்ப்பு நியாயமற்றது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here