இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஃபஹீம்-உல்-அஜீஸ் நேற்று (11) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவைச் சந்தித்தார்.

கடற்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவுக்கு இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here