இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தூதுவர்கள் நேற்று (08.11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல் இப்ராஹிம் மற்றும் ஜப்பான் தூதுவர் ISOMATA Akio ஆகியோர் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
நற்சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஜனாதிபதியையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.








