2022 ஆம் ஆண்டுடன்  இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன.

இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால இராஜதந்திரத் தொடர்புகளை எடுத்துக்காட்டும் வகையில் 02 நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்கு இருதரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் பாகிஸ்தான் அஞ்சல் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப்பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here