இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்களைக் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ஓட்டங்களை குவித்தார். இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 251 ஓட்டங்கள் எடுத்ததுடன் அபாரமாக ஆடிய ஜோ ரூட் சதம் கடந்து 103 ஓட்டங்களை அடித்து அசத்தியுள்ளார்.

2வது இன்னிங்சில் ஜோ ரூட் சதம் அடித்தது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 34வது சதமாக பதிவாகியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து முன்னாள் வீரர் அலய்ஸ்டர் குக்கின் (33 சதங்கள்) மாபெரும் சாதனை ஒன்றை ஜோ ரூட் தகர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here