இலங்கைக்கு வெளிநாட்டு நன்கொடைகளாக இரண்டு விமானங்களும் பத்து உலங்கு வானூர்திகளும் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இணைந்து C-130 ரக இரு போக்குவரத்து விமானங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக கூறினார்.
அத்துடன், அமெரிக்கா TH-57 ரக 10 உலங்கு வானூர்திகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.








