Sunday, September 27, 2026
No menu items!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

இலங்கை அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது!; ஜனாதிபதி அநுர

போரில் அன்புக்குரியவர்களை இழந்த வலியை பல குடும்பங்கள் இன்னும் சுமக்கின்றன என்றும் இதுபோன்ற துன்பங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற போர் வீரர்கள் நினைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை குறிப்பிட்டார். இராணுவத்தினர் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதை மாத்திரம் விரும்பவில்லை என்றும்,...

இலங்கைக்கு 2 விமானங்கள் மற்றும் 10 உலங்கு வானூர்திகள் வெளிநாட்டு நன்கொடையாக – ஜனாதிபதி!

இலங்கைக்கு வெளிநாட்டு நன்கொடைகளாக இரண்டு விமானங்களும் பத்து உலங்கு வானூர்திகளும் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இணைந்து C-130 ரக இரு போக்குவரத்து விமானங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக கூறினார். அத்துடன், அமெரிக்கா TH-57 ரக 10 உலங்கு வானூர்திகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்க...

அமெரிக்கா–ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின்...

2026 ஆம் ஆண்டு பாதீட்டுத் திட்டம் நவம்பரில் நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும்!

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பாதீடு சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த பாதீட்டுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, பாதீட்டுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு கோரி,...

நாட்டிற்கு வருகைதரவுள்ள நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர்..!

நியூஸிலாந்தின் பிரதி பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீற்றர்ஸ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை (24/05/2025) இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருக்கும் அவர், 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார். இதன்போது மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

ஜனாதிபதியின் கருத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு எதிராக நிறைவேற்று அதிகாரம் மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்த கருத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அதிகாரத்...

மின்சாரக் கட்டணத்தில் ஓரளவு விலை அதிகரிப்பு ஏற்படும்..!

மின்சாரக் கட்டணத்தில் ஓரளவு விலை அதிகரிப்பு ஏற்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வு வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், கடந்த டிசம்பர் மாத மின் கட்டணத்தை விட இது அதிகமாக இருக்காது என்றும் அவர் கூறினார். மேலும், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் மின் விலை திருத்தத்தின்படி இந்த விலை...

ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை குறைந்துவிட்டது – சாணக்கியன்..!

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரையில் உரிய பதில் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனவாதத்தை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டம் – ஜனாதிபதி..!

இனவாதத்தை பரப்புவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். வல்வெட்டித்துறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின் போது, நாட்டிலுள்ள அனைத்து இன மக்களினதும் கலாசாரம், பண்பாடுகள் மற்றும் விழுமியங்களைக் கொண்டாடும் வகையில் ஒக்டோபர் மாதத்தில் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். இதேவேளை, யாழ்.மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி வேலைத்திட்டம்...

எதிர்காலங்களில் கடுமையான சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படுத்தும் ஜனாதிபதி..!

இனவாதத்தைப் பரப்பும் தரப்பினருக்கு எதிராக எதிர்காலங்களில் கடுமையான சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டிலுள்ள அனைத்து இன மக்களினதும் கலை, கலாசாரங்களையும் கொண்டாடும் வகையில் ஒக்டோபர் மாதத்தில் “தேசிய மஹா மங்கல” நாள் ஒன்றை பிரகடனப்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img