தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான இலக்குகளை அறிமுகப்படுத்துவதை வலியுறுத்தி இலங்கையின் இராஜதந்திர சேவையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

அரசியல் சார்பு மற்றும் குடும்ப உறவுகளின் அடிப்படையில் அதிகாரிகளை நியமிக்கும் நீண்டகால நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

மொரட்டுவையில் உள்ள ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நிகழ்வின் போது பிரதி அமைச்சர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய ஹேவகே, இலங்கையின் சர்வதேச பிரதிநிதித்துவம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு இராஜதந்திர நியமனங்களில் தகுதி சார்ந்த அணுகுமுறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here