இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக்கப்பலின் முன்னோட்ட பயணம் நேற்றையதினம் (3/3/2025) ஆரம்பமானது.
எமது நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவு, திறன் என்பவற்றால் நவீன தொழில்நுட்பத்துடன் Dhanusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல், சோமாலியாவிலுள்ள அரச நிறுவனமொன்றுக்கு வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் உற்பத்தி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகும்.

அந்தவகையில் Dhanusha Marine நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்ற உள்நாட்டு உற்பத்தியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கு எமது அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








