மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்,.

கைது செய்யப்பட்ட பெண்கள் 32 வயது, 23 வயதை சேர்ந்தவர்கள்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் போது சிகரெட்டுகளை கொண்டுவருவதற்காகவே இருவரும் சுற்றுலா விசாக்களின் கீழ் துபாய்க்குச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here