பொலிஸார் பொதுமக்களை இணையவழி நிதி மோசடிகளுக்கு விழிப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.
டெலிகிராம், வட்ஸ்எப் போன்ற சமூக ஊடகக் குழுக்களில் மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது குழுக்கள் வருமான வாய்ப்புகள், பரிசுகள் போன்றவற்றை வழங்குவதாக கூறி மோசடி செய்யலாம்.
பொதுமக்கள் இந்த தூண்டுதல்களுக்கு ஏமாறாமல், கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள் போன்ற இரகசியத் தகவல்களை பகிரக்கூடாது என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.








