வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை ரூ.138,582 எனப் பதிவாகியுள்ளது.
எனினும், இவ்வார ஏலத்தில் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் விலை ரூ.180 முதல் ரூ.190 வரை, மற்றும் சிறிய தேங்காய் ஒன்றின் விலை ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனையாகி வருகிறது.








